சில்லி சிக்கன் Chilli Chicken😋😋
தேவையான பொருட்கள்
கோழி 1 Kg
பெரிய வெங்காயம் 6
மிளகாய் வற்றல் 7
தக்காளி 5
இஞ்சி, பூண்டு சிறிதளவு
கரம் மசாலா
நெய்
வினிகர்
எலுமி்ச்சைச்சாறு
வெள்ளரிக்காய்
செய்முறை
1. முதலில் கோழியை பெரிய துண்டுகளாக வெட்டி எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
2. மிளகாய் வற்றல்,இஞ்சி மற்றும் பூண்டை வினிகர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
3.பின்னர் துண்டுகளாக வெட்டிய கோழியுடன் அரைத்த விழுதை சேர்த்து,அத்துடன் கரம் மசாலா, உப்பு, மஞ்சள் தூள் (தேவையான விரல் நுனியளவு ) ஏலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊறவிடவும்.
4. பின்னர் இட்லி தட்டில் வைத்து ஆவியில் நன்றாக வேகவைக்கவும்.
5. பெரிய வெங்காயத்தை பொடிபொடியாக நறுக்கி சிறிது நெய் விட்டு நன்றாக வதக்க வேண்டும்.பின்னர் வேகவைத்த கோழி கலவையை தனியாக நெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
6. இத்துடன் வெள்ளரிக்காய், தக்காளி துண்டுகளை வைத்து எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.
Comments
Post a Comment